டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ விசாரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக ஆரப்பாட்டம்


டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ விசாரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக ஆரப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Feb 2020 6:04 AM GMT (Updated: 2020-02-04T12:58:44+05:30)

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு குறித்துச் சிபிஐ விசாரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

சென்னை

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகத் தினமும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாகச் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வழக்குகளைத் தனித்தனியாகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுகக் கோரிக்கை வைத்து உள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story