தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 6 Feb 2020 4:01 PM GMT (Updated: 2020-02-06T21:31:25+05:30)

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி காணப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை,

கொரோனா வைரஸ் தாக்குதலில், சீனாவில் இதுவரை 500க்கும் அதிமானோர் உயிரிழந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளிடம் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில்  நடைபெற்ற கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

அவர் பேசும்பொழுது, தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறி காணப்படவில்லை.

சித்த மருத்துவர்கள் தங்களுக்கு ஏதும் கருத்துகள் இருந்தால் தமிழக சித்தா மற்றும் ஆயுர்வேத துறை அதிகாரிகளோடு தொடர்பு கொள்ளலாம் என்றும் தவறான கருத்துகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

Next Story