சிறப்பாக பணியாற்றிய ரெயில்வே போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் - டி.ஜி.பி. வழங்கினார்


சிறப்பாக பணியாற்றிய ரெயில்வே போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் - டி.ஜி.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 12 Feb 2020 8:30 PM GMT (Updated: 12 Feb 2020 8:01 PM GMT)

சிறப்பாக பணியாற்றிய ரெயில்வே போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கினார்.

சென்னை, 

தமிழக ரெயில்வே போலீசில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதல்-அமைச்சரின் ‘காவலர் பதக்கம்’ வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமை தாங்கினார்.

திருச்சி, சென்னை காவல் மாவட்டங்களில் ரெயில்வே சம்பந்தப்பட்ட குற்றவழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட 48 போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் கடந்த ஆண்டு நடந்த குற்றங்களை ‘சைபர் கிரைம்’ மூலம் கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்து, திருடிய பொருட்களை மீட்ட 150 போலீசாருக்கு டி.ஜி.பி. சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே ஐ.ஜி. வனிதா, ரெயில்வே சூப்பிரண்டு செந்தில் குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story