அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து: தமிழக அரசு ஏற்காததற்கு கி.வீரமணி வரவேற்பு


அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து: தமிழக அரசு ஏற்காததற்கு கி.வீரமணி வரவேற்பு
x
தினத்தந்தி 14 March 2020 3:30 AM IST (Updated: 14 March 2020 2:33 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு ஏற்காததற்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

அண்ணா பல்கலைக்கழகத்தை கபளீகரம் செய்து தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, தந்திரமாக அதனை பிரித்து, மிகப்பெரிய உயர்கல்வி ஆராய்ச்சி தனி நிறுவனமாக்கி, அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு, தமிழ்நாடு அரசின் நாக்கில் தேன் தடவி, தனது வலையை விரித்தது.

ஆனால், இந்த ‘சிறப்பு அந்தஸ்து’ திட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறி உள்ளது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் இந்த கபளீகர திட்டத்திற்கு இடம் தராத வகையில், உயர்கல்வித்துறை அமைச்சரின் கூற்று அமைந்துள்ளது. இதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இறுதிவரை இருக்க வேண்டும்; இருக்கும் என நம்புகிறோம்.

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு கபளீகரம் செய்தால், இட ஒதுக்கீடு பறிபோவது, அண்ணா பெயரில் மாற்றம் மட்டுமல்ல; நியமனங்களும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 More update

Next Story