ஆர்.எஸ் பாரதி கைது வரவேற்கத்தக்கது- பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்
பிப்ரவரி 15ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது.
சென்னை,
திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு பாரதிய ஜனதா செயலாளர் எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:-
திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?. @polimernews@ThanthiTV@PTTVOnlineNews@sunnewstamil@news7tamil@News18TamilNadu
— H Raja (@HRajaBJP) May 23, 2020
Related Tags :
Next Story