தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 765 பேரில், 718 பேர் தமிழகத்திற்குள் இருந்தவர்கள் என்றும் 47 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் நேற்று வரை 9,989 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 10,576 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 7,839 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 833 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,324 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story