மருத்துவ மாணவர் சேர்க்கையில்இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அவசர சட்டம்மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
மருத்துவ மாணவர் சேர்க்கையில்இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அவசர சட்டம்மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.
சென்னை,
மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையல்ல என்று தீர்ப்பளித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இது சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடு என்பது ஒருபுறமிருக்க, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை தவறாக புரிந்து கொள்வதுதான் இதற்கு காரணம் ஆகும்.
27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக சலோனிகுமாரி என்பவர் தொடர்ந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால்தான் அந்த இட ஒதுக்கீட்டை வழங்க முடியவில்லை என்று மத்திய அரசு கூறி வருவதை ஏற்க முடியாது. எனவே சலோனிகுமாரி வழக்கை காரணம் காட்டாமல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி, மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த வேண்டும்.
அதேபோல், இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான சட்டம் நிறைவேற்ற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் தற்காலிக ஏற்பாடாக அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story