நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்க்கும் முடிவினைத் திரும்பப் பெற வேண்டும்.
மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டினை ரத்து செய்வதோடு, இடஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்ட பின்னர் சில இடங்களை தனியாக வைத்திருப்பது உட்பட, மாநில அரசுகள் தங்களுக்கென சொந்தத் தேர்வு முறையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். தங்கள் மாநில மாணவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் சேர்க்கைக்கான சட்டத்தை சுயமாக நிறைவேற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு எப்போதுமே உள்ளது.
நீட் தேர்வு அறிமுகம் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வியில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கையில் 17 சதவீதம் குறைந்து இருப்பது இந்தப் பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது. எனவே நீட் தேர்வை ரத்து செய்வதோடு மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செயல் முறையை வைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story