காஞ்சிபுரத்தில் இன்று இதுவரை 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
காஞ்சிபுரத்தில் இன்று தற்போது வரை 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம்,
சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தில் நேற்று 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 67 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதனால் காஞ்சிபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,037 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் தற்போது 1,822 பேர் கொரோனா சிகிச்சை பெர்று வரும் நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,177 ஆக உள்ளது. காஞ்சிபுரத்தில் இதுவரை 38 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story