கொரோனா தடுப்பு பணி: பாதுகாப்புடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் - சரத்குமார் வேண்டுகோள்


கொரோனா தடுப்பு பணி: பாதுகாப்புடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் - சரத்குமார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 July 2020 1:43 AM IST (Updated: 12 July 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு பணியில் பாதுகாப்புடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் தாக்கத்தால் தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பி.தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகியோர் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

பொதுமக்களின் நலனையும் பாதுகாப்பையும் கருதி அமைச்சர்கள் நேரடியாக மக்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் சுயபாதுகாப்புடன் அமைச்சர்கள் தங்கள் பணிகளை மக்களுக்காக செய்ய வேண்டும். அதேபோல் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், அரசு அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்தினர் இக்கட்டான சூழலில் நேரடியாக மக்கள் பணியில் பெரும்பாலும் ஈடுபட்டு வரும் சமூகப் பணியாளர்களும் விழிப்புடனும் பாதுகாப்புடனும் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story