ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மதுரையில் வங்கி சேவை 2 நாட்களுக்கு ரத்து: ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மதுரையில் வங்கி சேவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக, ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை,
மதுரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்பு அதிகரித்துள்ளதால், மதுரை மாவட்டத்தில், நேற்று வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு மேலும் 2 நாட்களுக்கு மதுரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதால், வங்கிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை வாடிக்கையாளருக்கு நேரடி வங்கி சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுரையில் முழு ஊரடங்கு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னையில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது, வாடிக்கையாளர்களுக்கு நேரடி வங்கி சேவைகள் வழங்குவதற்கான தடையும் நீட்டிக்கப்பட்டது. இதே போல, மதுரையிலும் வாடிக்கையாளர்கள் நேரடி வங்கி சேவைகள் இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. ஆனால் பெட்ரோல் மற்றும் கியாஸ் ஏஜென்சிகளுக்கு ரொக்கப் பரிவர்த்தனை சேவை வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story