மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை: முதல்வருடன் ஆலோசித்து முடிவு - அமைச்சர் தங்கமணி தகவல்


மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை: முதல்வருடன் ஆலோசித்து முடிவு - அமைச்சர் தங்கமணி தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2020 11:32 AM GMT (Updated: 2020-08-03T17:02:37+05:30)

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தது.  

முன்னதாக ஊரடங்கு காலகட்டத்தில் மின் ஊழியர்களால் மின்கட்டண மதிப்பீடு செய்ய வர முடியாததால் நான்கு மாதத்திற்கு ஒருமுறை என மின்கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வழக்கமான தொகையை விட மின்கட்டணம் அதிகமாக வந்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நாளை பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story