ஊரடங்கு விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்குப்பதிவு


ஊரடங்கு விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Aug 2020 8:30 AM GMT (Updated: 2020-08-17T14:09:31+05:30)

ஊரடங்கு விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ஊரடங்கு விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த 30 பேர் மீது மதுரவாயல் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story