சென்னையில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியது


சென்னையில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 6 Sept 2020 5:00 AM IST (Updated: 6 Sept 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியது. மேலும் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று குறைந்தது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (சனிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 79 ஆயிரத்து 840 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,516 ஆண்கள், 2,354 பெண்கள் என மொத்தம் 5,870 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 8 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 222 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 851 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 965 பேரும், கோவையில் 545 பேரும், கடலூரில் 434 பேரும் குறைந்தபட்சமாக சிவகங்கையில் 33 பேரும், ராமநாதபுரம், பெரம்பலூரில் தலா 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 50 லட்சத்து 42 ஆயிரத்து 197 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரத்து 685 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 697 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 255 ஆண்களும், 1 லட்சத்து 81 ஆயிரத்து 413 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 20 ஆயிரத்து 728 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 59 ஆயிரத்து 824 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 40 பேரும், தனியார் மருத்துவமனையில் 21 பேரும் என 61 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில் 19 பேரும், சேலத்தில் 6 பேரும், கன்னியாகுமரியில் 5 பேரும், செங்கல்பட்டு, கடலூரில் தலா 4 பேரும், புதுக்கோட்டை, நெல்லையில் தலா 3 பேரும், திருப்பூர், திருவாரூர், ராணிப்பேட்டையில் தலா இருவரும், திருச்சி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், நீலகிரி, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவையில் தலா ஒருவரும் என 21 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 7 ஆயிரத்து 748 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 859 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,537 பேரும், கோவையில் 366 பேரும், செங்கல்பட்டில் 357 பேரும் அடங்குவர். இதுவரையில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 366 பேர் குணம் அடைந்துள்ளனர். சிகிச்சையில் 51 ஆயிரத்து 583 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 922 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 870 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 186 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 440 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 6 தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 64 அரசு மற்றும் 96 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 160 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story