ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தற்கொலை முயற்சி


ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 13 Sept 2020 1:26 PM IST (Updated: 13 Sept 2020 1:28 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த் மாணவி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை,

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலைகள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகள் சவுமியா, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இன்று தேர்வு நடைபெற உள்ள நிலையில் நேற்று இரவு, இவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று காலை சவுமியா, தூக்கத்தில் இருந்து எழுந்திரிக்க அதிக நேரமானதால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அவர் தூக்க மாத்திரைகள் உட்கொண்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சவுமியாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story