நீட் தேர்வை தமிழக அரசு உறுதியாக எதிர்க்கிறது-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


நீட் தேர்வை தமிழக அரசு உறுதியாக எதிர்க்கிறது-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 13 Sep 2020 7:54 PM GMT (Updated: 13 Sep 2020 7:54 PM GMT)

நீட் தேர்வை தமிழக அரசு உறுதியாக எதிர்க்கிறது என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு, 

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வுக்காக 7 ஆயிரத்து 417 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 3 ஆயிரத்து 942 பேர் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள். நீட் தேர்வை தமிழக அரசு உறுதியாக எதிர்க்கிறது. 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பிரதமரிடம் காணொலி காட்சி வழியாக இதை தெரிவித்துள்ளார். தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதியுள்ளது. மாணவ- மாணவிகளின் மன அழுத்தத்தை குறைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story