மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு + "||" + Increase in water flow to Mettur Dam

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம்,

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் வினாடிக்கு 12,894 கன அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 12,894 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 91.78 அடியானது.


அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 54.70 டி.எம்.சி. ஆக உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணை நீர்மட்ட நிலவரம்
மேட்டூர் அணை நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 14,458 கன அடியாக அதிகரித்துள்ளது.
3. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,575 கனஅடியாக குறைந்த‌து
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு 8,575 கனஅடியாக குறைந்துள்ளது.
4. மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
5. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.