அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் தான் பாஜக உள்ளது - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்


அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் தான் பாஜக உள்ளது - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 11 Oct 2020 2:28 PM IST (Updated: 11 Oct 2020 2:28 PM IST)
t-max-icont-min-icon

தற்போது வரை அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் தான் பாஜக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளது என்று கூறினார். மேலும், “எங்கள் தலைமையில் கூட்டணி இல்லை. அடுத்த ஆண்டு அமையும் தமிழக ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தேர்வு சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தெரிவித்த அவர், அதிமுகவில் பிரச்சினை ஏற்பட்டு அவர்கள் பிளவுபட வேண்டும் என்று நினைத்தார்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.

Next Story