பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை: விஜயகாந்த் வலியுறுத்தல்
பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் நெடுங்காலமாகவே தலித் பெண்கள் அடக்குமுறைகள், பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க 1989-ல் சட்டம் உருவாக்கப்பட்டாலும், தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை. ஆணாதிக்க சமூகத்தில் பேதமின்றி அனைத்து பெண்களுக்கும் எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் இந்த சூழ்நிலையில், தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்க வேண்டும் என்றால் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.
அவ்வாறு மரண தண்டனை வழங்கும் பட்சத்தில் வரும் காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மரண தண்டனை ஒன்றே தீர்வு. அதை உடனடியாக நீதிபதிகள் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story