திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 14 Oct 2020 7:45 PM GMT (Updated: 14 Oct 2020 7:23 PM GMT)

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி 1995-ம் ஆண்டு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரி அனைத்து வசதிகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் 6 துறைகளையும் கொண்டு உள்ளது. டி.சி.எஸ். அங்கீகாரமும், ஐ.எஸ்.ஓ.9001:2015 தரச்சான்றிதழையும் பெற்று உள்ளது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறை இந்த கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்துறைக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

பொறியியல் படிப்பில் கட்டிடவியல் துறை (சிவில்), எந்திரவியல் துறை (மெக்கானிக்கல்), கணினித்துறை (சி.எஸ்.இ.), மின் மற்றும் மின்னணுத்துறை (இ.இ.இ.), தகவல் தொழில்நுட்ப துறை (ஐ.டி.), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (இ.சி.இ.) மற்றும் முதுநிலை (எம்.இ) பட்டமேற்படிப்பில் கணினித்துறை, வி.எல்.எஸ்.ஐ. மற்றும் வணிக நிர்வாகத்துறை (எம்.பி.ஏ.) ஆகிய பிரிவுகள் உள்ளன.

ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி செய்முறை ஆய்வகங்கள், அனைத்து துறைக்கும் பொதுவான மைய நூலகம் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி நூலகமும் உள்ளன. மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தர வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கல்லூரியில் மாணவர்களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் நவீன வசதிகளுடன் உள்ளன. கல்லூரி மற்றும் விடுதி வளாகம் முழுவதும் வைபை வசதி, கணிப்பொறி சேவை உள்ளது. கல்லூரியில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, சாயர்புரம், சாத்தான்குளம், திசையன்விளை, நாசரேத், உடன்குடி உள்ளிட்ட இடங்களுக்கும், கல்லூரிக்கு அருகில் உள்ள இடங்களுக்கும் 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மாணவர்களுக்கு வங்கி மூலம் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது.

இந்த கல்லூரியில் தற்போது மாணவர்கள் சேர்க்கை (கவுன்சிலிங் எண்: 4954) நடந்து வருகிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் படிப்புகள் குறித்த விவரங்களை பெற கல்லூரி இணையதளத்தின் வாயிலாகவும் ( www.drsacoe.org) , மின்னஞ்சல் drsacoe@aei.edu.in, princyengg@aei.edu.in மூலமாகவோ, முதல்வரை நேரிலோ அல்லது 9443246150, 04639-220715, 220702, 220700 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த தகவலை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தெரிவித்து உள்ளார்.


Next Story