மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் + "||" + Prime Minister Narendra Modi mourns the death of Edappadi Palanisamy's mother

எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

உங்களுடைய தாயார் தவுசாயம்மாள் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். இந்த துக்கமான தருணத்தில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தவுசாயம்மாள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் பலம் மற்றும் உத்வேகத்தின் முடிவில்லாத ஆதாரமாக திகழ்ந்தார். அவருடைய எளிமை, அரவணைப்பு, தன்னலமற்ற பண்புகள் இதற்கு எப்போதும் ஆதாரமாக இருக்கின்றன. 

பிராந்தியங்கள் மற்றும் மொழிகளில் உள்ள இந்திய கலாசாரங்கள் தாயை, கடவுளுக்கு முந்தைய ஸ்தானத்தில் வைத்துள்ளன. தவுசாயம்மாள் போன்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கருணை மற்றும் அர்ப்பணிப்பு மதிப்புகளுடன் வளர்த்திருப்பது இந்த நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. இப்போது வரையிலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் அவருடைய பாசம் மற்றும் கவனிப்புடன் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. அவருடைய மறைவின் காரணமாக உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உடல்ரீதியாக உங்களுடைய தாயார் இன்று உங்களுடன் இல்லை. ஆனால் அவர் விட்டுச்சென்ற நினைவுகள் மற்றும் அவர் உங்களிடமும், உங்கள் குடும்பத்தினரிடமும் ஏற்படுத்திய மதிப்புகள் மூலம் தொடர்ந்து வாழ்வார். இந்த துயரமான தருணத்தில் ஈடு செய்ய முடியாத இழப்பை தாங்கிக்கொள்ள உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இறைவன் வலிமையை கொடுக்கட்டும். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தா.பாண்டியன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
2. கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்; பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
3. கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட வரியை குறைத்து தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட வரியை குறைத்து தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
4. 10 லட்சம் வழக்குகள் வாபஸ் அறிவிப்பு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை போன்றது; எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
10 லட்சம் வழக்குகள் வாபஸ் அறிவிப்பு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போன்ற செயல் என்று எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
5. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்காவை எடப்பாடி பழனிசாமி 22-ந் தேதி திறந்து வைக்கிறார்; அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
தலைவாசல் அருகே ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்காவை வருகிற 22-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.