நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் லஞ்சம் கேட்கும் வீடியோ - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
திருவாரூர் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்கு உட்பட்ட கூந்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மணிமாறன். இவர் அதே ஊரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், தனது வயலில் அறுவடை செய்யப்பட்ட 52 மூட்டை நெல்லை விற்பனைக்காக கடந்த 16ஆம் தேதி எடுத்துச் சென்றுள்ளார்.
நெல்லை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதற்கான ரசீதை வழங்காமல், ஒரு மூட்டை நெல்லுக்கு 40 ரூபாய் வீதம் 2,080 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை அவர் வெளியிட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் - வருத்தம் தெரிவித்த விவசாயிகள்https://t.co/X9ZtX4QMO3#Thiruvarur | #Paddy | #Bribe
— Thanthi TV (@ThanthiTV) October 20, 2020
Related Tags :
Next Story