சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2020 5:00 AM IST (Updated: 24 Oct 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 06866) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல், தஞ்சாவூரில் இருந்து தினசரி இரவு 9.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக எழும்பூர்-தஞ்சாவூர் (06865) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 27-ந்தேதி முதல், தினசரி எழும்பூரில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்படும்.

* எழும்பூர்-கொல்லம் (06101) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி (நாளை) முதல், மாலை 5 மணிக்கு தினசரி எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக கொல்லம்-எழும்பூர் (06102) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல், தினசரி மதியம் 12 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.

* எழும்பூர்-திருச்சி (02653) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 27-ந்தேதி முதல், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினசரி இரவு 11.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக திருச்சி-எழும்பூர் (02654) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல், தினசரி இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும்.

மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story