தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 2 Dec 2020 1:52 PM GMT (Updated: 2020-12-02T19:22:26+05:30)

தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,84,747 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,733 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,398 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,62,015 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10,999 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story