அரியர் வைத்துள்ள மாணவர்கள் பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு


அரியர் வைத்துள்ள மாணவர்கள் பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2020 10:52 PM IST (Updated: 3 Dec 2020 10:52 PM IST)
t-max-icont-min-icon

அரியர் வைத்துள்ள மாணவர்கள் பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

2020 நவம்பர் - டிசம்பர் மாதத்திற்கான அரியர் தேர்வுகளை எழுத டிசம்பர் 10ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.  

முன்னதாக பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை நடத்த, தமிழக அரசிடம், அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி கோரி இருந்தது. இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர்த்து, அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்திய, அனைத்து அரியர் மாணவர்களும், தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், அரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், அரியர் மாணவர்களுக்கு தேர்வு வைக்க அண்ணா பல்கலைக்கழகம் அரசிடம் அனுமதி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story