பொறியியல் படிக்கும் மாணவர்களின் ஆன்லைன் வழி வகுப்புகள் பற்றி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் படிக்கும் மாணவர்களின் ஆன்லைன் வழி வகுப்புகள் பற்றி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதி ஊரடங்கு அமலானது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. ஆனால், மாணவ மாணவியரின் கல்வி பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் வழியில் பயில அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிக்கும் மாணவர்களின் நலனை முன்னிட்டு ஆன்லைன் வழி வகுப்புகள் பற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
இதன்படி, பொறியியல் படிப்பு படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏப்ரல் வரை ஆன்லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என அறிவித்துள்ளது.
இதுதவிர்த்து, நாள் ஒன்றுக்கு 5 வகுப்புகள் மட்டுமே நடைபெற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Related Tags :
Next Story