தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்


தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 17 Dec 2020 8:41 PM IST (Updated: 17 Dec 2020 8:41 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை, 

ராமேஸ்வரத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 3,000க்கும் மேற்பட்ட மீனவர்கள், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 36 மீனவர்களை கைது செய்து, 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது. 

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்களையும், 5 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் நேரடியாக தலையிட்டு வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.  

Next Story