அவதூறு வீடியோ வெளியிட்டதாக வழக்கு: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி
அவதூறு வீடியோ வெளியிட்ட வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டதாக கூறி ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால், நீதிபதி கர்ணன் ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் ஆஜரான முதன்மை அரசு வக்கீல் கவுரி அசோகன், ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, கர்ணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story