பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அளிக்கும் 36 படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியானவையாக அறிவிப்பு
பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அளிக்கும் 36 படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை,
உயர் கல்வித்துறை முதன்மைச்செயலாளர் தலைமையில் கடந்த மாதம் 28-ந்தேதி சமத்துவக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகள் அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கு தகுதியான படிப்புகளாக பரிந்துரைத்து, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு உயர் கல்வித்துறை ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.ஏ. பயன்பாட்டு பொருளாதாரம் (அப்ளையிட் எக்கனாமிக்ஸ்) படிப்பு, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.ஏ. கார்ப்பரேட் பொருளாதாரம் படிப்பு ஆகியவை அரசு வேலை பெறுவதற்கான எம்.ஏ. பொருளாதாரம் படிப்பு தகுதிக்கு நிகரானது.
இதேபோல பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் 33 படிப்புகள் அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கு தகுதி உள்ள படிப்புகளுக்கு நிகரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 36 படிப்புகள் அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கான தகுதி உள்ள படிப்புகளுக்கு நிகரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story