2021-22ல் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் கணக்கு காட்டியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்


2021-22ல் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் கணக்கு காட்டியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
x

2021-22ல் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் கணக்கு காட்டியவர்கள் எண்ணிக்கை 1.31 லட்சமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வருமான வரி தாக்கல் தொடர்பான கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"2020-21ல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமான வரி கணக்கு காட்டியவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2021-22ல் 1.31 லட்சமாக அதிகரித்தது. 10 லட்சம் ரூபாயில் இருந்து 1 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கணக்கு காட்டியவர்களின் எண்ணிக்கை 2020-21ல் 72.66 லட்சமாக இருந்தது. அதுவே 2021-22ல் 76.90 லட்சமாக அதிகரித்தது."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்டு தகவல் அறிக்கையில் உள்ள விவரங்களுக்கும், வருமான வரி தாக்கல் படிவங்களில் நிரப்பப்பட்ட விவரங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தால், அதற்கு விளக்கமளிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் என்று மத்திய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.


Next Story