மும்பையில் இருந்து சென்னைக்கு 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை


மும்பையில் இருந்து சென்னைக்கு 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை
x
தினத்தந்தி 10 Jun 2021 6:52 AM GMT (Updated: 10 Jun 2021 6:52 AM GMT)

மும்பையில் இருந்து சென்னைக்கு 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன.

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் பல்வேறு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

அந்த வகையில் தமிழகத்திற்கு இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மும்பையில் இருந்து சென்னைக்கு 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் தமிழகத்தின் பல்வேறு தடுப்பூசி மையங்களுக்கு தேவைகேற்ப பிரித்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story