மாநில செய்திகள்

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை என்ஜினீயர் கைது சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை + "||" + Chief Secretary orders appointment of 44 public prosecutors to Chennai, Madurai iCourt

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை என்ஜினீயர் கைது சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை என்ஜினீயர் கைது சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை என்ஜினீயர் கைது சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை.
சென்னை,

மதுரையில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை மண்டல அலுவலகத்தில் நிர்வாக என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் வி.எல்.பாஸ்கர். மத்திய அரசு பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் காண்டிராக்டர்களுக்கு வழங்க வேண்டிய பில் தொகையை அனுமதிக்க இவர், ரூ.50 ஆயிரம் லஞ்சமாக பெற்ற போது அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.


லஞ்சப்பணத்தை கொடுத்த தனியார் நிறுவனங்களை சேர்ந்த பி.என்.சிவசங்கர் ராஜா, பி.நாராயணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து என்ஜினீயர் பாஸ்கர் வீட்டில் நடத்திய சோதனையில் பல்வேறு காண்டிராக்டர்களிடம் இருந்து பெறப்பட்டு தனித்தனி கவர்களில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

விசாரணைக்கு பின்பு, அவர்கள் 3 பேரும் மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

மேற்கண்ட தகவல் சி.பி.ஐ. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. செவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட உத்தரவு
செவிலியர்கள் தங்களது தாய்மொழியில் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவு, கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்டது.
2. “தடுப்பூசிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை
தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், அதனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
3. கொரோனா பரவல் அளவின்படி மாவட்ட வாரியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை
தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாமா? பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றி உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
4. சாலையில் தேவை இன்றி சுற்றி திரிந்தோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை போலீசார் நூதன நடவடிக்கை
சாலையில் தேவை இன்றி சுற்றி திரிந்தோருக்கு போலீசார் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து நூதன முறையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.
5. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூத்தாநல்லூர் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம் நகராட்சி ஆணையர் தகவல்
கொேரானா பரவலை கட்டுப்படுத்த கூத்தாநல்லூர் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று நகராட்சி ஆணையர் லதா கூறினார்.