358 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் 16,813 பேருக்கு கொரோனா


358 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் 16,813 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Jun 2021 9:50 PM GMT (Updated: 10 Jun 2021 9:50 PM GMT)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 16,813 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 358 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 71 ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9,278 ஆண்கள், 7,535 பெண்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 813 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 682 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,529 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

358 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோவையில் 2,236 பேரும், சென்னையில் 1,223 பேரும், ஈரோட்டில் 1,390 பேரும், திருப்பூரில் 837 பேரும், சேலத்தில் 945 பேரும், குறைந்தபட்சமாக சிவகங்கையில் 102 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 86 லட்சத்து 90 ஆயிரத்து 398 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 13 லட்சத்து 53 ஆயிரத்து 435 ஆண்களும், 9 லட்சத்து 55 ஆயிரத்து 365 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 23 லட்சத்து 8 ஆயிரத்து 838 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 83 ஆயிரத்து 318 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 31 ஆயிரத்து 389 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 223 பேரும், தனியார் மருத்துவமனையில் 135 பேரும் என 358 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 45 பேர் பலி

அந்தவகையில் அதிகபட்சமாக சென்னையில் 45 பேரும், கோவையில் 20 பேரும், செங்கல்பட்டில் 22 பேரும், சேலத்தில் 23 பேரும், திருப்பத்தூர், தேனியில் தலா 19 பேரும், தஞ்சாவூரில் 16 பேரும், வேலூரில் 15 பேரும், திருவண்ணாமலையில் 14 பேரும், கரூர், கடலூரில் தலா 13 பேரும், திருப்பூரில் 12 பேரும், கிருஷ்ணகிரியில் 10 பேரும் உள்பட 36 மாவட்டங்களில் 358 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 79 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 28 ஆயிரத்து 528 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

32,049 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 32,049 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 20 லட்சத்து 91 ஆயிரத்து 646 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 664 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story