எந்த நிபந்தனைகளின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையை நிறுத்தக்கூடாது; பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு


எந்த நிபந்தனைகளின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையை நிறுத்தக்கூடாது; பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
x
தினத்தந்தி 16 Jun 2021 12:19 AM GMT (Updated: 2021-06-16T05:49:34+05:30)

கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* மாணவர்களின் சேர்க்கையின் போது எவ்விதமான படிவத்துக்கும் கட்டணங்கள் வசூலிக்க கூடாது.

* மாணவர் சேர்க்கை அரசு விதிகளின்படி செயல்பட வேண்டும்.

* எவ்வித நிபந்தனைகளின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையினை திட்டவட்டமாக நிறுத்துதல் கூடாது.

* மாற்று சான்றிதழ்கள் (டி.சி.) மாணவர்களுக்கு வழங்கும்போது எந்தவித புகார்களுக்கும் இடமின்றி செயல்பட வேண்டும்.

* இந்த அறிவுரைகளை தவறாமல் அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் புதிய கல்வி ஆண்டில் பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய பணிகள் என்ன? என்பது குறித்தும், கல்வித்துறை சார்ந்த பணிகள் என்ன? என்பது குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக இன்று (புதன்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் இந்த கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.

Next Story