அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகள்: அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பம்

அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பம் அளித்துள்ளது.
சென்னை,
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள கருக்காய்குறிச்சி வடத்தெருவில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சர்வதேச ஏலத்திற்கு அழைப்பாணை விடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ஏல அறிவிப்பில் உள்ள அந்த டெல்டா பகுதியை நீக்க வேண்டும் என்றும், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட விவசாயப் பகுதி என்பதால் கைவிட வேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கவும், கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் 5 கிணறுகள் அமைக்கவும் ஓஎன்ஜிசி நிறுவனம், சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
Related Tags :
Next Story