கொரோனா குறைந்ததும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கொரோனா குறைந்ததும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 20 Jun 2021 2:22 AM GMT (Updated: 2021-06-20T07:52:56+05:30)

ஹலோ எப்.எம். வானொலியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி பணிகளை துரிதப்படுத்தியதன் விளைவாக கொரோனா 2-வது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், இதற்கு முக்கிய காரணம் மக்களின் ஒத்துழைப்பு தான் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.மேலும் தான் பதவியேற்ற போது ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினை தமிழகத்தில் அதிகளவில் இருந்ததாகவும், இன்றைக்கு 900 டன் ஆக்சிஜன் வாயு கையிருப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் தற்போது 3-வது அலையை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் 80 சதவீதம் அளவுக்கு நிறைவேற்றி விட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என்றும், இதற்கு முதல்-அமைச்சரின டெல்லி பயணத்தின் போது 
எடுக்கப்பட்ட புகைப்படங்களே சாட்சியாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்று முடிந்த பிறகு மருத்துவத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது போன்று சம கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துகளை நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Next Story