தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பா.ஜ.க. குரல் கொடுக்க தயாரா? சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்வி


தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பா.ஜ.க. குரல் கொடுக்க தயாரா? சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 23 Jun 2021 7:59 AM GMT (Updated: 23 Jun 2021 7:59 AM GMT)

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பா.ஜ.க. குரல் கொடுக்க தயாரா? என சட்டசபையில் முதல்-அமைஅ-ச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சென்னை

தமிழக சட்டசபையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நீட் தேர்வு விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார். 

நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதே திமுக, அ.தி.மு.க.வின் உணர்வு; தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பா.ஜ.க.-குரல் கொடுக்க தயாரா? -  என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சட்டத்திற்கு உட்பட்டு விதிவிலக்கு தரப்பட்டால், பா.ஜ.க ஆதரவு தயார் என நயினார் நாகேந்திரன் கூறினார். 

சென்னையை போல கோவைக்கு மெட்ரோ கொண்டுவரப்படாதது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுபினார்.

கோவையை எக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தவறான கருத்தை பதிவு செய்யவேண்டாம்  முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
மக்கள் எங்களை ஏன் புறக்கணிக்கிறார்கள் என புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறோம். மக்கள் எங்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை   என வருத்தப்படும் அளவுக்கு தமிழநாடு அரசின் செயல்பாடு இருக்கும் என  கூறினார்.

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என  ஜி.கே மணி எம்.எல்.ஏ கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ பேசும் போது பெரிய கோவில்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் உள்ள சிறிய கோவில்களிலும் சாதியப் பாகுபாடு இல்லாத நிலையை கடைபிடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  கோரிக்கை வைத்தார்,

மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா பேசும் போது சிங்காரச்சென்னை 2.0 பாணியில் 'மின்னும் மன்னை' திட்டத்திற்கு முழு ஆதரவை முதல்-அமைச்சர் தருவார் என நம்புகிறேன் என கூறினார்.

Next Story