நீட் தொடர்பாக தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும்: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை


நீட் தொடர்பாக தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும்: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை
x
தினத்தந்தி 23 Jun 2021 10:41 AM GMT (Updated: 23 Jun 2021 10:41 AM GMT)

நீட் தேர்வு தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்து தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும் என உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த அறிக்கையை, திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

 நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து தி.மு.க. தரப்பிலான தகவல்கள் அறிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின் பேரில் நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு நல்ல முடிவை எடுக்கும் 

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தி.மு.க அரசின் நிலைப்பாடு   நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராக உள்ள மாணவர்கள் உள்பட அனைத்து மாண்வர்களும் பாதிக்காதவகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.


Next Story