வங்கி ஏ.டி.எம்.மில் நூதன முறையில் கொள்ளையடித்தது எப்படி? வடமாநில கொள்ளையன் பரபரப்பு வாக்குமூலம்

வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் அரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி, கொள்ளையடித்தது எப்படி? என்று போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை,
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறி வைத்து ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும், ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணனும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
கொள்ளையன் கைது
இதற்கிடையே தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகரபிரசாத் அடங்கிய தனிப்படை போலீசார் அரியானா மாநிலத்துக்கும், இன்னொரு தனிப்படை ராஜஸ்தான் மாநிலத்துக்கும் விரைந்தனர்.
அரியானா மாநிலத்துக்கு சென்ற தனிப்படையினர், கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த 4 பேரையும் அடையாளம் கண்டுபிடித்து, அதில் ஒரு முக்கிய கொள்ளையனை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்து சாதனை படைத்தனர்.
கைது செய்யப்பட்ட கொள்ளையன் பெயர் அமீர் (வயது 37). இவர் அரியானா மாநிலம், மேடாக் மாவட்டம், வல்லப்கர் என்ற இடத்தை சேர்ந்தவர். அவர் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் இது போன்ற கொள்ளை தொழிலில் கைதேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பரபரப்பு வாக்குமூலம்
கைதான கொள்ளையன் அமீரை, விமானத்தில் சென்னை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. அமீர் மூலம் பிடிபடாத மேலும் 3 கொள்ளையர்களை பிடிக்க வியூகம் வகுக்கப்பட்டது. இதனால் கொள்ளையன் அமீரை சென்னை கொண்டு வருவதில் தாமதம் ஆனது.
அரியானா மாநில கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு அதன்பிறகு கொள்ளையன் அமீரை டெல்லி அழைத்து வந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு நேற்று இரவு 7 மணிக்கு அழைத்து வந்தனர். விமானநிலையத்தில் இருந்து அவரை ராயலா நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு 2 மணி நேரம் விசாரணை நடந்தது. அதன்பின்னர் அமீரை பூந்தமல்லி மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்றக்காவலில் ஜெயிலில் அடைப்போம் என்றும், பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணையில் கொள்ளையன் அமீர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
குலத்தொழில்
எங்கள் கிராமமே குலத்தொழில் போல இதுபோன்ற நூதன கொள்ளை தொழிலை செய்து வருகிறோம்.
ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளையில் ஈடுபடுவது எப்படி என்று எங்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும். அதன்படி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு நாங்கள் குழுக்களாக பிரிந்து செல்வோம்.
முதல் முறையாக....
தமிழகத்திற்கு முதல் முறையாக 10 பேர் கொண்ட 5 குழுக்கள் வந்தோம். ஊரடங்கு அமலில் இருந்ததால், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. இதை பயன்படுத்தி நாங்கள் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தோம். பல நாட்கள் நோட்டமிட்டு குறிப்பிட்ட ஏ.டி.எம். மையங்களை தேர்வு செய்து பணத்தை அள்ளினோம். தப்பிச்செல்லும்போது சிலர் ரெயில் மூலமும், சரக்கு லாரிகள் மூலமும் தப்பி சென்றார்கள். நான் விமானத்தில் சென்றேன்.
இவ்வளவு சீக்கிரம் போலீசார் எங்களை நெருங்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. கொள்ளையடித்துவிட்டு ஊருக்கு சென்றவுடன் 1 வாரம் விருந்து படைத்து அமர்க்களப்படுத்துவோம். அதன்பிறகு ஊரை விட்டு சிறிது காலம் வெளியில் சென்று விடுவோம். போலீசார் கண்டுபிடித்து விட்டார்களா என்பதை டி.வி. செய்தி வாயிலாக தெரிந்து கொண்டு எங்காவது பதுங்கி கொள்வோம்.
டி.வி.யில் செய்தி வரும்போதே போலீசார் எங்கள் கிராமத்துக்கு வந்து விட்டனர். இதனால் நான் மாட்டிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story