மக்கள் கூடுமிடங்களில் இனி தீவிர கட்டுப்பாடுகள் - சென்னை மாநகராட்சி


மக்கள் கூடுமிடங்களில் இனி தீவிர கட்டுப்பாடுகள் - சென்னை மாநகராட்சி
x
தினத்தந்தி 15 July 2021 7:54 AM GMT (Updated: 2021-07-15T13:24:13+05:30)

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளதாக புகார் வந்துள்ளது. 

கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற விதிமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்றை கட்டுபடுத்த அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு வழிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகள், வணிக வளாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story