தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை


தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
x
தினத்தந்தி 18 July 2021 10:59 AM GMT (Updated: 18 July 2021 10:59 AM GMT)

தமிழக மீனவர்களின் வலைகளை வெட்டி, சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து உள்ளனர்.



ராமேசுவரம்,

இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற கச்சத்தீவு அருகே தமிழகத்தின் ராமேசுவரம் மீனவர்கள் சிலர் தங்களுடைய படகுகளில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர்.  இந்த நிலையில், அங்கே வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடித்து உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இலங்கை கடற்படையினர் தங்கள் படகிலிருந்த வலைகளை வெட்டி, சேதப்படுத்தி விரட்டியடித்தனர் என தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை அடுத்து ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் கரை திரும்பி வருகின்றனர்.

இலங்கை ராணுவத்தினர் மீனவர்கள் மீது கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் சில மீனவர்களை அவர்கள் சிறைபிடித்து சென்றுள்ளனர். தொடர்ந்து மீனவர்களின் படகுகளையும் அவர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலால், ஒவ்வொரு படகுக்கும் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது.


Next Story