கோவில் நிலத்தில் பள்ளி மைதானம்: வாடகை வசூலிக்க அமைச்சா் உத்தரவு


கோவில் நிலத்தில் பள்ளி மைதானம்: வாடகை வசூலிக்க அமைச்சா் உத்தரவு
x
தினத்தந்தி 22 July 2021 11:25 PM GMT (Updated: 22 July 2021 11:25 PM GMT)

கோவில் நிலத்தில் செயல்படும் தனியார் பள்ளி மைதானத்திற்கு வாடகை வசூலிக்க அமைச்சா் சேகா்பாபு உத்தரவிட்டு உள்ளார்.


சென்னை,

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கோவில் நிலங்களை மீட்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது.  இந்நிலையில், சென்னை கபாலீஸ்வரா் கோவில் நிலத்தில் தனியார் பள்ளி மைதானம் செயல்பட்டு வருகிறது.  அதனை மீட்டு அதற்குரிய வாடகையை வசூல் செய்ய வேண்டுமென இந்து சமய அறநிலைய துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோவிலுக்கு அருகிலுள்ள குமரகுருநாதன் தெரு, பொன்னம்பல வாத்தியார் தெரு, கிழக்கு குளக்கரை தெரு, பிச்சுப்பிள்ளை தெரு ஆகிய 4 வீதிகளில் கோவிலுக்கு சொந்தமான 22 கிரவுண்டு பரப்பிலான கட்டிடங்கள், நூலகம் ஆகியன உள்ளன.

இதனை பொது மக்களும், பக்தா்களும் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக மாற்ற வகை செய்யும் பெருந்திட்டத்துக்கான வரைபடம் ஒன்றை உருவாக்க அமைச்சா் சேகா்பாபு உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலைய துறை செய்தி தெரிவிக்கின்றது.

எந்த காலகட்டத்திலும் நீா் வற்றாமல் தேங்கி நிற்க தேவையான மண் உறுதி தன்மையை ஆய்வு செய்யவும், மண் மாதிரி பரிசோதனை செய்து அறிக்கையின் முடிவின் அடிப்படையில் தேவைப்படும் புதிய களிமண் கொண்டு குளத்தில் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதிகாரிகளை அவா் கேட்டு கொண்டார். குளத்தை சுற்றிலும் நந்தவனம், அழகிய மின் வண்ண விளக்குகள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கபாலீஸ்வரா் கோவிலுக்கு சொந்தமான சுமார் 46 கிரவுண்ட் பரப்பளவு நிலத்தை, விளையாட்டு மைதானமாக பி.எஸ்.உயா்நிலை பள்ளி பயன்படுத்தி வருகிறது. இந்த இடத்தை மீட்டு வாடகை வசூல் செய்ய நடவடிக்கை வேண்டுமென அமைச்சா் சேகா்பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story