தமிழகத்தில் மேலும் 1,957- பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் மேலும் 1,957- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 2 Aug 2021 1:26 PM GMT (Updated: 2021-08-02T18:56:21+05:30)

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக 27-பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-  

தமிழகத்தில் இன்று 1,957- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,068-பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,385- ஆக உள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 28-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1,45,321-மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 189-பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

Next Story