லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது இடையூறு செய்ததாக அதிமுகவினர் மீது வழக்கு

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது இடையூறு செய்ததாக அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணி வீட்டில் காலை முதல் மாலை வரை மொத்தம் 11 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் லாக்கர் சாவி மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடைபெறுவது பற்றிய தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், தாமோதரன், அமுல் கந்தசாமி ஆகியோர் சென்றனர். மேலும் அங்கு அ.தி.மு.க. தொண்டர்களும், மகளிர் அணியினரும் திரண்டு வந்தனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்த போலீசாரிடம் முன்னாள் அமைச்சரின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர். ஆனால் அதை மீறி எம்.எல்.ஏ.க்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடுப்புகளை வைத்தனர். இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே அ.தி.மு.க.வினர் தடுப்புகளை தூக்கிக்கொண்டு வேறு இடத்தில் கொண்டு போய் போட்டனர். மேலும் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் குவிந்து சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது இடையூறு செய்ததாக திமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம்
மற்றும் முன்னாள் எம்பி வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story