விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிப்பு: அ.தி.மு.க. அரசு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்


விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிப்பு: அ.தி.மு.க. அரசு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 11 Aug 2021 9:16 PM GMT (Updated: 2021-08-12T02:46:29+05:30)

விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிப்பு: அ.தி.மு.க. அரசு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் வைகோ வலியுறுத்தல்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசின் கெயில் நிறுவனம், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.

தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், எட்டு வழி சாலை திட்டம் ரத்து, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி ரத்து என விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் 7 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முந்தைய அ.தி.மு.க. அரசு கொடுத்த அனுமதி உத்தரவை ரத்து செய்து, கெயில் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

மேலும், இது குறித்து போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story