அரை நிர்வாண வீடியோவால் சர்ச்சை: மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம்


அரை நிர்வாண வீடியோவால் சர்ச்சை: மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம்
x
தினத்தந்தி 7 Oct 2021 8:24 PM GMT (Updated: 7 Oct 2021 8:24 PM GMT)

அரை நிர்வாண வீடியோவால் சர்ச்சை: மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம்.

மதுரை,

மதுரை மாநகர் ஆயுதப்படையில் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றியவர் சோமசுந்தரம். டிக்-டாக் செய்தது, போலீசாரை அவரது சொந்த வேலைக்கு பயன்படுத்தியது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீஸ் துணை கமிஷனர் சோமசுந்தரம், டவுசர் மட்டும் அணிந்து கொண்டு எண்ணெய் மசாஜ் செய்த படியும், அருகே மது பாட்டில்கள் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது.

மேலும் அந்த வீடியோவில், போலீஸ்காரர் ஒருவரை அவர் புல்லாங்குழல் வாசிக்க வைத்து அரைநிர்வாணத்துடன் அமர்ந்து ரசிப்பதுமான காட்சிகளும் உள்ளன. இது மற்றொரு சர்ச்சையாகவும் மாறியது. இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா விசாரணை நடத்தி தமிழக டி.ஜி.பி.க்கு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழக டி.ஜி.பி. பிறப்பித்துள்ள உத்தரவில் போலீஸ் துணை கமிஷனர் சோமசுந்தரம் சென்னை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Next Story