வேளச்சேரி-தரமணி மேம்பாலத்தை விரைவில் முதல்-அமைச்சர் திறந்து வைப்பார் - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.


வேளச்சேரி-தரமணி மேம்பாலத்தை விரைவில் முதல்-அமைச்சர் திறந்து வைப்பார் - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
x
தினத்தந்தி 8 Oct 2021 2:34 PM GMT (Updated: 2021-10-08T20:04:04+05:30)

வேளச்சேரி-தரமணி மேம்பாலத்தை விரைவில் முதல்-அமைச்சர் திறந்து வைப்பார் என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

வேளச்சேரி-தரமணி மேம்பாலத்தின் கட்டுமானப் பண்கள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக சமூக வளைதளங்களில் தகவல்கள் பரவின. இதையடுத்து தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. மற்றும் வேளச்சேரி எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று பாலத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், தென்னக ரெயில்வே அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பணிகளை சென்னை மாநகராட்சியின் வசம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வேளச்சேரி உயர்மட்ட மேம்பாலத்தின் ஒரு பகுதியான வேளச்சேரி-தரமணி மேம்பாலத்தை விரைவில் முதல்-அமைச்சர் திறந்து வைப்பார் என்று கூறினார். 

Next Story