பொறியியல் மாணவர் சேர்க்கை; 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 9 Oct 2021 7:52 AM GMT (Updated: 2021-10-09T13:22:15+05:30)

பொறியியல் மாணவர் சேர்க்கையில் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை,

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அதில் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர விருப்பம் தெரிவிக்கவில்லை என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.  இதேபோன்று 31 கல்லூரிகளில் ஒரு சதவீதத்திற்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story