மாநில செய்திகள்

“உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி” - கமல்ஹாசன் + "||" + Kamal Haasan thanks the people who voted in the local elections

“உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி” - கமல்ஹாசன்

“உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி” - கமல்ஹாசன்
உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு என்னும் பணிகள் நேற்று தொடங்கி நடைபெற்றது. பல பகுதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும், பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக முன்னிலை வகிக்கிறது.

இந்தத் தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் 110க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதேநேரம் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இந்தத் தேர்தலில் தனித்து களமிறங்கின. இருப்பினும், 2 கட்சிகளாலும் இந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும் கூட வெல்ல முடியவில்லை. இது அக்கட்சி தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களைப் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மக்கள் பணி இன்னும் வேகமாக தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சித் தேர்தல்: பிற்பகலுக்குள் முழுமையான முடிவுகள் - மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் விவரம் பிற்பகலுக்குள் முழுமையாக வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2. உள்ளாட்சித் தேர்தல் 2-ம் கட்ட பிரச்சாரம் : இன்று மாலையுடன் நிறைவு
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
3. உ.பி. வன்முறை: கமல்ஹாசன் கண்டனம்
உ.பி. நடைபெற்ற வன்முறைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. உள்ளாட்சித் தேர்தல்: "பூத் சிலிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்" - மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, பூத் சிலிப் இல்லாத வாக்காளர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்று அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
5. உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.