மாநில செய்திகள்

சொந்த ஊர் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்: சென்னை ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை + "||" + For one who has gone home Atrocity: Chennai auto driver murder

சொந்த ஊர் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்: சென்னை ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

சொந்த ஊர் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்: சென்னை ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
ஆலங்குளம் அருகே ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 41). இவர் சென்னையில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி உஷா. இவர் சங்கரன்கோவிலில் உள்ள கல்லூரியில் சமையலராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.


பிணமாக கிடந்தார்

சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் வீட்டில் இருந்து வெளியே சென்ற இளங்கோவன் மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஆலங்குளம் அருகே ஊத்துமலையை அடுத்த பலபத்திரராமபுரம் குளத்தின் கரையில் இளங்கோவன் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வெட்டிக்கொலை

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், இளங்கோவன் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இளங்கோவனை கொலை செய்த கொலையாளிகள் யார்? அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட இளங்கோவனின் தந்தை செல்லத்துரை, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. யார் பெரிய ஆள்? என்ற போட்டி: பிரபல ரவுடி வெட்டிக்கொலை 8 பேர் கைது
யார் பெரிய ஆள்? என்ற போட்டியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை
ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செல்போனை பறித்து சென்ற ஆத்திரத்தில் ரவுடியை கொன்றதாக அண்ணன்-தம்பி இருவரை போலீசார் கைது செய்தனர்.
3. மனைவியை மீட்டுதரக்கோரி லாரி டிரைவர் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் லாரி டிரைவர் குடும்பத்துடன் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது..
4. பா.ஜனதா பிரமுகர் ஓட, ஓட வெட்டிக்கொலை
சிவகங்கையில் ஓட, ஓட விரட்டி பா.ஜனதா பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பா.ஜனதா கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. சென்னை மீனவர் வெட்டிக்கொலை
சென்னை மீனவர் வெட்டிக்கொலை.